\
'மநீம உறவுகளே ஏழை மக்களுக்கு உதவுங்கள்' - கட்சியினருக்கு கமல்ஹாசன் உத்தரவு!

'மநீம உறவுகளே ஏழை மக்களுக்கு உதவுங்கள்' - கட்சியினருக்கு கமல்ஹாசன் உத்தரவு!

'மநீம உறவுகளே ஏழை மக்களுக்கு உதவுங்கள்' - கட்சியினருக்கு கமல்ஹாசன் உத்தரவு!
Published on

''மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்'' என்று கட்சியினருக்கு கமல்ஹாசன் உத்தரவிட்டுள்ளார்.

விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்களின் இயல்புவாழ்க்கை முடங்கியுள்ளது. இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மநீம உறவுகளே, மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும்'' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com