தமிழ்நாடு
மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவருடன் கமல் சந்திப்பு
மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவருடன் கமல் சந்திப்பு
மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் ப்ளூம் பாக்ஸைக் கண்டுபிடித்த டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரை நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார்.
நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக் கொள்ளும் புதிய தொழில்நுட்பமான ப்ளூம் பாக்ஸை, தமிழகத்தில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கமல் ஆலோசித்துள்ளார். இந்தத் திட்டத்தினை தமிழகத்தின் கிராம பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து முயற்சிக்குமாறு கமல் கேட்டுக்கொண்டார். மேலும் தமிழகம் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் முதன்மை நுகர்வராக மாறும் எதிர்காலத்தை தம்மால் கணிக்க முடிகிறது என சந்திப்புக்கு பிறகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.