\
மு.க ஸ்டாலினுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்திப்பு

மு.க ஸ்டாலினுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்திப்பு

மு.க ஸ்டாலினுடன் மநீம தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்திப்பு
Published on

திமுக தலைவர் மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார்.

தமிழக முதல்வராக 7ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் கமல்ஹாசன்.

சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதற்காக, ‘’ நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சராக பதவியேற்கிறீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்’’ என ஏற்கெனவே கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இந்தக் கூட்டத்தில் இதில் அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com