பினராயி விஜயன், ராதிகா சரத்குமாருக்கு கொரோனா.. நலம் பெற கமல்ஹாசன் வாழ்த்து

பினராயி விஜயன், ராதிகா சரத்குமாருக்கு கொரோனா.. நலம் பெற கமல்ஹாசன் வாழ்த்து

பினராயி விஜயன், ராதிகா சரத்குமாருக்கு கொரோனா.. நலம் பெற கமல்ஹாசன் வாழ்த்து
Published on

'முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா' என்று எச்சரித்துள்ளார் கமல்ஹாசன். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கோழிக்கோடுவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த  நடிகை ராதிகா சரத்குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். (1/2)</p>&mdash; Kamal Haasan (@ikamalhaasan) <a href="https://twitter.com/ikamalhaasan/status/1380198704666210314?ref_src=twsrc%5Etfw">April 8, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

இந்நிலையில் இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- 

''கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட'' என்று பதிவிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com