திருப்பரங்குன்றம் வீதியில் இறந்துகிடந்த அபூர்வ சகோதரர்கள் துணை நடிகர் - யாசகம் பெற்று வாழ்ந்த அவலம்!

திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துவந்த மோகன், கமல் ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார்.
இறந்த துணை நடிகர்
இறந்த துணை நடிகர்NGMPC22 - 168

கமலின் அபூர்வ சகோதர்கள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த துணை நடிகர் வறுமை காரணமாக திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் இறந்துகிடந்த சோகம்!

சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சின்னு என்பரது இளைய மகன் மோகன் (வயது 60) திருமணமான நிலையில் கடந்த 25ஆம் தேதி இவரது மனைவி உயிரிழந்துள்ளார். திரைப்படங்களில் துணை நடிகரான இவர், கமல் ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்திருந்தார்.

மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இறந்த மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பெரிய ரத வீதியில் மோகன் இறந்துள்ளதாக வந்த தகவலையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் இறந்த மோகனின் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மோகனுக்கு 2 சகோதார்கள், 5 சகோதரிகள் உள்ளனர். இறந்த மோகனுடைய உடலை இலவச ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கமலஹாசன் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் படத்தில் நடித்த துணை நடிகர் வறுமையின் காரணமாக தெருவில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com