மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்
Published on

வலதுகால் அறுவைசிகிச்சை முடிந்து சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு விபத்து ஏற்பட்டு காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக வலது காலில் ஏற்பட்ட சிறு தொற்று காரணமாக, மீண்டும் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்த நிலையில், அவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கமல்ஹாசன் வீடு திரும்பினார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com