தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி: பஸ் பயணிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் பெட்டிக்கடைக்காரர்
கள்ளக்குறிச்சி: பஸ் பயணிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் பெட்டிக்கடைக்காரர்
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் பெட்டிக்கடைக்காரர் இலவசமாக முகக்கவசம் வழங்கி வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் முன்புறம் சிறிய பெட்டிக்கடை நடத்தி வருபவர் செந்தில்குமார் என்ற தாஸ். இவர் பஸ் நிலையம் பகுதியில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்கள் மற்றும் பஸ்ஸில் முகக்கவசம் இன்றி பயணம் செய்பவர்களுக்கு தினந்தோறும் இலவசமாக முகக்கவசம் வழங்கி வருகிறார்.