Kallakurichi Tragedy | Two Dead After Electrocution Incident
Kallakurichi Tragedy | Two Dead After Electrocution Incidentpt web

கள்ளக்குறிச்சி | மின்சாரம் தாக்கி இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

தியாகதுருகம் அருகே வாட்டர் வாஷ் கடையில் மின்சாரம் தாக்கி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்
Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் கடையில் தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் தியாகதுருகம் கரிம் ஷா தக்கா பகுதியை சேர்ந்த ஷாகில் ஆகிய இருவரும் வேலை செய்து வந்தனர்.

அரவிந்த்
அரவிந்த்NGMPC059

இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த போது அரவிந்த் மற்றும் ஷாகில் ஆகிய இருவர் மீதும் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஷாகில்
ஷாகில்NGMPC059

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் இன்று அதிகாலை சிகிச்சை பலர் இன்றி பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த சம்பவம் குறித்து தியாகதுருகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com