க.குறிச்சி: திமுக கூட்டத்திற்கு சென்ற மினிவேன் விபத்து; காயம் அடைந்தவர்களுக்கு உதவிய அதிமுக எம்எல்ஏ!

திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சென்ற மினிவேன் விபத்திற்கு உள்ளானது. அதிமுக எம்.எல்.ஏ படுகாயமடைந்த 5 பேரை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே புதுமாம்பட்டு பிரிவு சாலையில் சென்ற மினி வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் கள்ளக்குறிச்சியில் திமுக செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் படுகாயமடைந்த 5பேரை தனது காரில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மற்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து தொடர்பாக தியாகதுருகம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com