கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் - உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாமுண்டி என்பவர் உயிரிழந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி 220 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். இதில் மொத்தம் 59 பேர் உயிரிழந்துள்ளனர். இதில்167 பேர் உள் நோயாளிகளாக உள்ளனர். அதில் 12 பேர் முழுமையான கண் பார்வையை இழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை சிபிஐ காவல்துறை 14 பேரை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com