தனி மாவட்டமானது கள்ளக்குறிச்சி : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தனி மாவட்டமானது கள்ளக்குறிச்சி : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

தனி மாவட்டமானது கள்ளக்குறிச்சி : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
Published on

கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாகவும், தமிழகத்தின் 33வது மாவட்டமாகவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.

தமிழகத்தின் சட்டபேரவையின் இன்றைய கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் பழனிசாமி பதிலுரையாற்றினார். அப்போது சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு ஆகியோரின் கோரிக்கையேற்று, கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார். விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். அத்துடன் அந்த மாவட்டத்திற்கு ஆட்சியர் தனியாக நியமிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. கடைசியாக அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. இந்நிலையில் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தின் மாவட்டங்கள் எண்ணிக்கை மொத்தம் 33 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் இருப்போர் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு வருவதென்றால் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும், அத்துடன் 10க்கும் அதிக சட்டமன்ற தொகுதிகளையும் கொண்டிருப்பதால் அதனை நிர்வகிப்பதற்கு சிக்கல் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நிலையை எளிதாக்க தனி மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com