சோளக்காட்டில் கிடந்த நகைப் பெட்டிகள்.. கள்ளக்குறிச்சி நகைக்கடையில் 200 சவரன் திருட்டு!
கள்ளக்குறிச்சி அருகே நகைக் கடையின் பூட்டை உடைத்து 200 பவுன் நகை கொள்ளை போனதாக நகைக்கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி என்ற இடத்தில் லோகநாதன் என்பவர் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை விடுமுறை விடப்பட்டிருந்தது அதனைத் தொடர்ந்து இன்று காலை லோகநாதன் கடை அருகே வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கடையை திறந்து பார்த்தபோது சுமார் 200 பவுன் தங்க நகையும் 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் எஸ்பி பகலவன் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டார். நகை கடைக்கு பின்புறமாக உள்ள சோளக்காட்டில் நகைகள் வைத்திருந்த சில பெட்டிகள் வீசி சென்ற நிலையில், அவற்றுடன் ஒருசில தங்க நகைகளையும் மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.