\
காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
Published on: 

தமிழகத்தைச் சேர்ந்த காளீஸ்வரி எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, புதுச்சேரி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 54 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முறையாக ‌வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் இடங்களில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு‌பட்டுள்ளனர். சமீப காலமாக வருமான வரி சோதனைகள் நடைபெறும் இடங்களில் சிஆஎபிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது ஐ.டி. ரெய்டு நடைபெற்று வரும் அனைத்து இடங்களிலும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடு‌பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com