கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்: மேல்முறையீடு செய்ய நெறிமுறைகள் வெளியீடு

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

வரும் 15 ஆம் தேதி (நாளை) முதல் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்த ஒரு கோடியே 65 லட்சம் பெண்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பத்தாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி, விண்ணப்பத்தாரர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் 18 ஆம் தேதி முதல் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்.

மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். மேல்முறையீடு செய்ய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

Attachment
PDF
DIPR-P.R NO.1875-Kalaignar Magalir Urimai Thittam Press Release-Date 13.09.2023 pdf.pdf
Preview

இதுகுறித்து செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com