\
விவசாயிகள் காப்பீடு செய்ய அணுகினால் வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்...வேளாண் துறை செயலாளர்

விவசாயிகள் காப்பீடு செய்ய அணுகினால் வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்...வேளாண் துறை செயலாளர்

விவசாயிகள் காப்பீடு செய்ய அணுகினால் வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும்...வேளாண் துறை செயலாளர்
Published on

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் காப்பீடு செய்ய அணுகினால் அனைத்து வங்கிகளும் கட்டாயமாக அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை ககன்தீப் சிங் பேடி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ககன்தீப் சிங் பேடி பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் வறட்சி நிலவுவதாக தெரிவித்தார். மேலும் அரசால் அனுமதிக்கப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் காப்பீடு செய்ய அணுகினால் அனைத்து வங்கிகளும் கட்டாயமாக அதனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு மூலம் பெறப்படும் தகவல்கள் அடிப்படையிலேயே மத்திய அரசிடம் வறட்சி நிவாரணம் கோர முடியும் எனவும் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com