\
“எத்தனை டிக்கெட் முன்பதிவுசெய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம்” - கடம்பூர் ராஜூ

“எத்தனை டிக்கெட் முன்பதிவுசெய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம்” - கடம்பூர் ராஜூ

“எத்தனை டிக்கெட் முன்பதிவுசெய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக்கட்டணம்” - கடம்பூர் ராஜூ
Published on: 

ஆன்லைனில் எத்தனை சினிமா டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். 

தமிழகம் முழுக்க ஆன்லைன் டிக்கெட் முறையை அமல்படுத்துவதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகள் விரைவில் நிறைவடைந்து இந்தமாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். 

மேலும், தற்போது ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் தனித்தனி சேவை கட்டணம் எனும் முறையிலும் மாற்றம் கொண்டு வந்து, எத்தனை டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஒரு டிக்கெட்டுக்கான சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com