\
ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க ஒத்துழைப்பு தேவை - கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க ஒத்துழைப்பு தேவை - கடம்பூர் ராஜூ

ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க ஒத்துழைப்பு தேவை - கடம்பூர் ராஜூ
Published on

தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தந்தால்தான் ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க முடியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, “தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தந்தால்தான் ஆன்லைனில் படம் வெளியாவதை தடுக்க முடியும். ஆன்லைன் டிக்கெட் விற்பனை முறையை அவசர கோலத்தில் செயல்படுத்த முடியாது. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகளை கிடப்பில் ஏதும் போடவில்லை. தமிழக பாடதிட்டத்தில் வர்மக்கலையை சேர்க்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலிக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com