\
ஆன்லைன் டிக்கெட் கூடுதல் கட்டணம் - தமிழக அரசு ஆலோசனை

ஆன்லைன் டிக்கெட் கூடுதல் கட்டணம் - தமிழக அரசு ஆலோசனை

ஆன்லைன் டிக்கெட் கூடுதல் கட்டணம் - தமிழக அரசு ஆலோசனை
Published on

திரையரங்குகளில் அரசே ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் விற்பனையின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை முறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 

மேலும், திரையரங்குகளில் ஆன்லைன் மூலமாக அரசே டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக தயாரிப்பாளர்கள், திரையரங்க ‌உரிமையாளர்களிடம் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திரையரங்குகள் கணினிமயமாக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com