பஞ்சாப்
பஞ்சாப்புதிய தலைமுறை

பஞ்சாப்பில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்! அதிர்ச்சி வீடியோ! நடந்தது என்ன?

பஞ்சாப்பில் நடைப்பெற்ற போட்டியின்போது தமிழக வீராங்கனையை நடுவர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
Published on

பஞ்சாப்பில் நடைப்பெற்ற போட்டியின்போது தமிழக வீராங்கனையை நடுவர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.

இந்தவகையில், அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே இன்று நடந்த கபடி போட்டியின்போது, அன்னை தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வாக்குவாதம் முற்றியநிலையில், நடுவரிடம் சென்று முறையிட்டுள்ளனர்.

அப்போது பேச்சுவார்த்தையும் ஈடுபட்டிருந்த நடுவரும் தமிழக வீராங்கனையை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால், இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலிகளை தூக்கி வீசிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாப்
வேங்கை வயல் | மனித மலம் கலந்தது யார்? 2 வருடங்களுக்கு பின் கிடைத்த விடை! அவிழ்ந்தது மர்ம முடிச்சு!

இந்நிலையில், தமிழ்நாடு கபடி சார்பாக ராஜஸ்தான் கபடி சார்பாக பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆண்களுக்கு இடையேயான போட்டி நடைப்பெற்றபோது இதே போன்ற சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com