“முதல் தீவிரவாதி இந்து என கமல் சொன்னது சரிதான்” - கீ.வீரமணி

“முதல் தீவிரவாதி இந்து என கமல் சொன்னது சரிதான்” - கீ.வீரமணி

“முதல் தீவிரவாதி இந்து என கமல் சொன்னது சரிதான்” - கீ.வீரமணி
Published on

முதல் தீவிரவாதியும் கடைசி தீவிரவாதியும் இந்துதான் என திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி கூறியுள்ளார்.

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பள்ளப்பட்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை. காந்தியார் சிலைக்கு முன்பு நின்றுக் கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ எனத் தெரிவித்தார்.

கமல்ஹாசனின் இத்தகைய பேச்சுக்கு பாஜகவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கமல் பேச்சு குறித்து திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோட்சே ஆர்.எஸ்.எஸ்ஸில் பயிற்சி எடுத்தவர். மத்திய பிரதேசத்தில் வேட்பாளராக களமிறங்கி உள்ள பிரக் யாதவ் சிங் என்பவர் ஜாமினில் வெளியே வந்துதான் தேர்தலில் நிற்கிறார். முதல் தீவிரவாதியும் இந்துதான், கடைசி தீவிரவாதியும் இந்துதான் என்று சொல்ல கூடிய அளவில் இருக்கிறது. அதைத்தான் கமல் சொல்லியுள்ளார். மூன்றாவது அணி என்பது முன்பு இருந்தது. தற்போது கருச்சிதைவு அடைந்து கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com