தமிழக பாஜக இடத்தை வாங்கிக் கொள்ள தயாரா ? எல்.முருகன் கேள்வியும் அழகிரியின் பதிலும் !
தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள தயாரா என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் "தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் நடைபெற்றுள்ள மோசடி நேஷனல் ஹெரால்டு மோசடியைவிட 100 மடங்கு அதிகமானது என்றும் எனவே ரூபாய் 100 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ள இந்த மோசடிக் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்" என ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்ட கே.எஸ்.அழகிரி "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையில் ஊழல் என பேசியுள்ளார். பெருந்தலைவரின் வழியில் இதய சுத்தியோடு, ஏழைகளுக்காக, நேர்மையாக பணியாற்றுகிறது அறக்கட்டளை" என தெரிவித்தார்.
இந்நிலையில் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ள எல்.முருகன் "தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக்கொள்ள கே.எஸ்.அழகிரி தயாரா?" என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு உடனடியாக பதிலளித்த கே.எஸ். அழகிரி "எங்களிடம் PM care உள்ளதா என்ன!" என கேட்டுள்ளார்.