மாநிலங்களவை எம்.பி பதவி - கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா

மாநிலங்களவை எம்.பி பதவி - கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா
மாநிலங்களவை எம்.பி பதவி - கே.பி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா

மாநிலங்களவை எம்.பி பதவியில் இருந்து அதிமுக கே.பி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் பதவி விலகினர்.

கடந்த அதிமுக ஆட்சியில் கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இருவரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் என இரண்டு பதவிகளில் இருந்தால் அவர்கள் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அந்த வகையில் கே.பி முனுசாமி தனது மாநிலங்களவை எம்.பிபதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது வேப்பனஹள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கிறார். அவரைத்தொடர்ந்து வைத்தியலிங்கமும் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ ஆக நீடிக்கிறார்.

இருவரும் தற்போது எம்.பி பதவியிலிருந்து விலகி எம்.எல்.ஏவாக நீடிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com