ஸ்டாலினை விமர்சிக்கும்போது கண்டிக்காத தோழமைக் கட்சிகள் - கே.என்.நேரு வருத்தம்

ஸ்டாலினை விமர்சிக்கும்போது கண்டிக்காத தோழமைக் கட்சிகள் - கே.என்.நேரு வருத்தம்

ஸ்டாலினை விமர்சிக்கும்போது கண்டிக்காத தோழமைக் கட்சிகள் - கே.என்.நேரு வருத்தம்
Published on

திமுக தலைவர் ஸ்டாலினை ஆளுங்கட்சிகள் விமர்சிப்பதை தோழமைக் கட்சிகள் கண்டிக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். 

திருச்சியில் திராவிட கழகம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், “திமுக தலைவர் ஸ்டாலின் உளறுகிறார் என விமர்சிக்கிறார்கள். டாக்டர் பட்டம் பெற்ற நீங்கள் சரியாக பேசுகிறீர்களா?. கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்கிறீர்கள். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு பிரதமர் யார் என்றே தெரியவில்லை. மன்மோகன் சிங் என்கிறார். 

தலைவர்கள் பேசும்போது ஓரிரு வார்த்தைகள் தவறுவது இயல்பு. தலைவர் குறிப்பெடுத்து பேசுவதாக விமர்சிக்கிறார்கள். முதல்வர் உள்பட அமைச்சர்கள் பேப்பரை பார்த்து பக்கம் பக்கமாக வாசிக்கிறார்கள். ஸ்டாலினை ஆளுங்கட்சிகள் விமர்சிப்பதை தோழமைக் கட்சிகள் கண்டிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com