தமிழ்நாடு
தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சிசிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக பொதுச் செயலாளராக இருப்பவர் க.அன்பழகன். இவர் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக கருதப்படுகிறார். இவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளித்தொல்லை காரணமாக அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் க.அன்பழகனை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் நலம் விசாரித்தனர். அன்பழகன் நலமுடன் இருப்பதாக திமுக துணை பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.