பத்தாண்டுகள் காலம் வெற்று அரசாக இருந்தது அதிமுக - கே.பாலகிருஷ்ணன் சாடல்

பத்தாண்டுகள் காலம் வெற்று அரசாக இருந்தது அதிமுக - கே.பாலகிருஷ்ணன் சாடல்

பத்தாண்டுகள் காலம் வெற்று அரசாக இருந்தது அதிமுக - கே.பாலகிருஷ்ணன் சாடல்
'திமுக அரசு எதிர்கொண்டு வரும் கடன் பிரச்னை உருவாகக் காரணமே கடந்த அதிமுக அரசுதான்' என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 50 ஆண்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றி மறைந்த இரண்டு நிர்வாகிகள் படத்திறப்பு விழாவில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக வேளாண்துறைக்கு என பிரத்யேகமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் விவசாய பிரச்னைகளை தனியாக கவனிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 100 நாள் திமுக ஆட்சியில் கொரோனாவை எதிர்த்து போராடி வெற்றி பெற்றுள்ளது.
பெற்றோருக்கு பெரிய சுமையாக உள்ள கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட திமுகவின் தேர்தல் அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் தொகுப்பூதியம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருபவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் தலையில் சுமையை ஏற்றும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு குறைக்கும் என்ற நம்பிக்கை இல்லை'' என்றார்.
திமுக அரசின் முதல் பட்ஜெட் யானை பசிக்கு சோளப்பொறி என்ற அதிமுகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு கே.பாலகிருஷ்ணன் பதிலளிக்கையில், ''10 ஆண்டு காலம் வெற்று அரசாக இருந்த அதிமுக, ஆட்சிக் காலத்தில் என்ன செய்தார்கள் என்பதை பரிசீலித்து திமுகவை விமர்சிக்க வேண்டும் என்றார். அதிமுக அரசின் நிதி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சுமையை தற்போது திமுக அரசு அனுபவித்து வருவதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com