“தினம் ஒரு திருக்குறள்” - வழக்கறிஞர்களுக்கு நீதிபதி வைத்த பரீட்சை
நீதிமன்ற அரங்கில் தினமும் ஒரு திருக்குறளையும் அதற்கான பொருளையும் கூற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் தமிழில் ஆர்வமுள்ளவரும், கூடுதல் மாவட்ட நீதிபதி செம்மலின் தந்தையுமான பழமலய் அவர்களை சந்தித்தபோது அவர் திருக்குறள் முனுசாமி என்ற புத்தகத்தை தனக்கு பரிசாக அளித்ததாக தெரிவித்திருந்தார்.
இந்தப் புத்தகத்தைப் படித்த பின்னர் நீதிபதிகள் ஹரிபரந்தாமன் மற்றும் மகாதேவன் திருக்குறளின் பெருமைகள் குறித்து கூறியது நினைவிற்கு வந்தது.
51 திருக்குறளையாவது ஒவ்வொரு தமிழனும் மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும் என தான் நினைப்பதால் படிக்கவிருப்பதாகவும் அதே போல், இன்று முதல் வழக்குகளின் பட்டியலில் இருக்கும் ஏதாவது ஒரு வழக்கறிஞரை தான் தேர்வு செய்ய அவர் மதியம் 1.30 அல்லது மாலை 4 45 மணி அளவில் ஒரு திருக்குறளையும் அதற்கான பொருளையும் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று வழக்கறிஞர் திருவடிக்குமார் திருக்குறளை கூற உள்ளார்.