தமிழ்நாடு
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வானதால், மூத்த நீதிபதியான ஹூலுவாடி ரமேஷ் தலைமை நீதிபதிக்கான பொறுப்புகளை கவனித்து வந்தார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. இந்திரா பானர்ஜிக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காலை 9.30 மணிக்கு பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.