தனி நபர் ஆணையம் அதிகாரமற்றது : நீதியரசர் அரிபரந்தாமன்

தனி நபர் ஆணையம் அதிகாரமற்றது : நீதியரசர் அரிபரந்தாமன்

தனி நபர் ஆணையம் அதிகாரமற்றது : நீதியரசர் அரிபரந்தாமன்
Published on

ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையில் அமைக்கப்படும் தனி நபர் ஆணையம் அதிகாரமற்றதாக இருப்பதால் மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றனர் என ஓய்வு பெற்ற நீதியரசர் அரிபரந்தாமன் தெரிவித்துள்ளார்.   .

திருப்பூர் மாவட்ட அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ஓய்வு பெற்ற நீதியரசர் அரிபரந்தாமன், கடந்த காலங்களில் வந்த தீர்ப்புகளைப்பற்றித்தான் ஊடகங்களும் மக்களும் விவாதம் செய்தும், விமர்சித்தும் வருகின்றனர், அது தவறில்லை. 

ஆனால் நாம் விவாதிக்க வேன்டிய முக்கிய வழக்குகளான ஆதார் வழக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களாகலாம், அயோத்தி விவகாரம் ஆகியவை விட்டு விடுகிறோம். இதுபோண்ற வழக்குகளில்தான் நாம் முக்கியத்துவம் காட்டவேண்டும். மேலும் தமிழகத்தில் அவ்வப்போது அமைக்கப்படும் தனி நபர் விசாரனை ஆணையங்கள் பிரச்சினைக்காக தற்காலிகமாக அமைக்கப்படுகிறது. ஆணையத்திற்கு முழு அதிகாரமில்லாமல் இருப்பதால் மக்கள் நம்பகத்தன்மை அடைவதில்லை, அதற்கு முழு அதிகாரமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com