மீண்டும் தொடங்கியது யானை சவாரி !

மீண்டும் தொடங்கியது யானை சவாரி !

மீண்டும் தொடங்கியது யானை சவாரி !
Published on

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் 48 நாட்களுக்கு பிறகு மீண்டும் யானைகள் சவாரி இன்று காலை துவங்கியது. 

முதுமலை, தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கடந்த 48 நாட்களாக புத்துணர்வு முகாம் நடந்து வந்தது. புத்துணர்வு முகாமை அடுத்து வளர்ப்பு யானைகளுக்கு முழு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக முதுமலையில் நடந்து வந்த யானைகள் சவாரி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று புத்துணர்வு முகாம் முடிந்த நிலையில் இன்று காலை முதல் யானைகள் சவாரி மீண்டும் துவக்கப்பட்டது. முதல் நாள் என்பதால் ஒரு யானை மட்டுமே சுற்றுலா பயணிகளை அழைத்து கொண்டு சவாரி சென்றது. இந்த  நிலையில் யானைகள் சவாரிக்கான கட்டணம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்டது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது அடுத்த சில தினங்களில் தான் தெரியவரும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ஸ்ரீனிவாசரெட்டி தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com