Headlines: இபிஎஸ்ஸின் திட்டவட்டம் முதல் தமிழகத்தில் கனமழை வரை!
* 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் GOOD BYE சொல்வார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
* தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லை என கூறியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து, தான் எடுப்பதே முடிவு எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
* காமராஜர் குறித்த தனது பேச்சை விவாதப் பொருளாக்க வேண்டாம் என திமுக எம்.பி. திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* திமுகவின் கட்டுக்கதைகளால் காமராஜர் வீழ்த்தப்பட்டார் என்றும் கூட்டணியின் பெயரால் அவமதிப்பை ஏற்க முடியாது எனவும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
* தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
* மாற்றுத்திறனாளிகளுக்கான எடை குறைந்த சக்கர நாற்காலியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.
* சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை பிளஸ் 2 மாணவர்கள் சிலர் மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கும் திட்டத்தின்கீழ் 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.
* படப்பிடிப்பு தளத்தில் விபத்துகள் ஏற்படமால் இருக்க, படக்குழுவினர்தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென, அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
* கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நபரை, காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.