பள்ளி மாணவியை நீதிபதி ஆக்கிய நீதிபதி

பள்ளி மாணவியை நீதிபதி ஆக்கிய நீதிபதி
பள்ளி மாணவியை நீதிபதி ஆக்கிய நீதிபதி

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியம் வீரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கும், மாணவர் காவல் படையினருக்கும் (NCC) இன்று காவல்துறை, நீதித்துறை, மருத்துவத்துறை என பல்துறை சார்பில் சட்ட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதில் ஆர்.கே பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயராமன் காவல் சட்ட தடுப்புகளை பற்றி விளக்கினார். அடுத்து சோளிங்கரில் உள்ள குற்றவியல் நீதித் துறையின் சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிபதி என்.சுரேஷ், கருவரை முதல் இறுதிவரை பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் சட்டம் பாதுகாப்பு அளிக்கிறது என்றும் பெண் சிசு கொலையை தடுப்பதும் சட்டம் தான் என்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினார். 

இதையடுத்து அங்கிருந்த ஒரு மாணவியை அழைத்து தன் நீதிபதி இருக்கையில் அமரவைத்து இரண்டு நிமிடம் நீதான் இங்கு நீதிபதி என்று கூறினார். அந்த மாணவியை நீதிபதியாக நினைத்து அனைவரும் மரியாதை செய்தனர். இந்நிகழ்வு நீதிமன்றத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com