நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தான் வழங்கபடுகிறது நீதி வழங்குவதில்லை – சீமான் கருத்து

நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தான் வழங்கபடுகிறது நீதி வழங்குவதில்லை – சீமான் கருத்து
நீதிமன்றங்களில் தீர்ப்புகள் தான் வழங்கபடுகிறது நீதி வழங்குவதில்லை – சீமான் கருத்து

நீதி மன்றங்களில் தீர்ப்புகள் தான் வழங்கபடுகிறது நீதி வழங்குவதில்லை என அதிமுக தீர்ப்பு குறித்து சீமான் பேட்டியளித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம்.... உயர் நீதிமன்றத்தில் அதிமுகவிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு....

இது நீதிபதிகளின் விளையாட்டு அப்பாவி மக்கள் என்ன சொல்வது ஒரு வழக்கு, ஒருநாடு, ஒருசட்டம், ஆனால், எத்தனை தீர்ப்புகள் வழங்கபடுகிறது என்பதை நாம் பார்க்கிறோம், கீழமை நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு பல ஆண்டு காலமாக நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வழங்கபடுகிறது அனால் நீதி வழங்குவதில்லை மேலும் இது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் இது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றவரிடம்...

இலங்கை முன்னால் அதிபர் கோட்டபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பியது குறித்து கேட்டதற்கு, உலக நாடுகள் அந்நாட்டுக்கு 30 ஆயிரம் கோடி நிதியை வழங்கவுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். அதனால் அவர் திரும்பி வந்துள்ளார் இதில் எனக்கு கருத்து ஏதும் இல்லை என்றார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனக் கூறும் அரசு எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என தெரிவிக்க வேண்டும். உதாரணமாக கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வாழ்ந்து கொண்டுள்ளனர், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்திய நாட்டின் முதன்மை மொழி தமிழ்தான் எனக் கூறும் மோடி அதற்கான அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com