நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது!

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது!

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது!
Published on

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்

சென்னையில் இருந்து புனே செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான கோபாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வெளியாகியுள்ள முதல்கட்ட தகவலின்படி தமிழக ஆளுநர் குறித்து தொடர்ந்து அவதூறு செய்திகளை பரப்பி வந்ததாகவும், அதன் அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட புகாரின் படி கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com