விஜயின் டார்கெட் திமுகதான்... விசிகவுக்கு மிகப்பெரிய சிக்கல்.. போட்டுடைத்த மணி!
’இந்த பிரச்னையை ஆரம்பித்ததே நீங்கள்தான்’ தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து பத்திரிக்கையாளர் மணி கருத்து.
விஜய்யால் திருமாவின் ஆளுமையை சிதைக்க முடியாது!
”கடந்த முறை பாஜகவிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று பேசியதால், மணிப்பூர் வன்முறை குறித்து தற்போது விஜய் பேசினார். அடுத்து வேங்கை வயல் குறித்தும், 200 சீட்டு என்று திமுக சொல்வதற்கும் பதிலை கொடுத்திருக்கிறார்.
விசிக இன்னும் இந்த விஷயத்தை பக்குவமாக கையாளலாம். திருமா 35 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் ஒரு அரசியல்வாதி.. 25 ஆண்டுகளாக வாக்குவங்கி அரசியலில் இருக்க கூடியவர். விஜய் ஒரு புது அரசியல் தலைவர்.அவரால், திருமாவின் ஆளுமையை சிதைக்க முடியாது.
உங்களது பலவீனத்தை வெளியில் காண்பித்து கொள்கிறீர்கள்
எனவே, விசிக இவ்வளவு தூரம் பதற்றமடைவேண்டிய அவசியமே இல்லை. தொடர்ந்து 5 மாத காலமாக விசிக கொடுக்கும் அறிக்கைகள், திருமா கொடுக்கும் அறிக்கைகளில் ஏதோ ஒரு இடத்தில் பிரச்னை இருக்கிறது.. நீங்கள் ஏன் உங்களது பலவீனத்தை வெளியில் காண்பித்து கொள்கிறீர்கள்..
முமுக்க முமுக்க நீங்களாக ( விசிக) தலையில் போட்டிக்கொண்ட பிரச்னைதான் இது. எதற்காக விஜயையும் மற்றவர்களையும் குறை கூறுகிறீர்கள்.
விஜய் தனிப்ப்பட்ட முறையில் திருமாவை அவதூறாக பேசவில்லை. ’அவர் எங்களுடன் இருக்கிறார்’ என்பதில் பக்குவம் இல்லாமல் இருக்கலாம் ஆனால், எந்த தவறும் இல்லை..
விஜய் தன்னுடையை டார்கெட் திமுகதான் என்று தெளிவாக கூறுகிறார்.. ‘திருமா இந்த மேடைக்கு வந்திருக்க வேண்டும் வராதது தவறு’ என்பது அவருடைய கருத்து. ‘வராவிட்டாலும், திருமாவின் மனது இங்கேதான்’ இருக்கிறது என்றும், ’நிர்பந்தத்தால் அவர் முடிவை எடுத்துள்ளார்’ என்பது அவரது கருத்து.. கருத்தை தெரிவிப்பதற்கான உரிமை அவருக்கு இருக்கிறது.
திமுகவின் கூட்டணியில் இருக்கும் வேறு எந்த கட்சிகளும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று பேசவில்லை.. ஆதவ் அர்ஜூனா 3 முறை இது குறித்து மேடையில் பேசினார். ஆனால், திருமா முன்னுக்கு பின் முரணாக பேசினார். இந்த பிரச்னையை ஆரம்பித்ததே நீங்கள்தான்.
திருமா எல்லோருக்குமான தலைவர் . தலித்துக்களுக்குமட்டுமான தலைவர் இல்லை.. ஆனால், இன்று எங்கு வந்து நிற்கிறது.” என்று பேசியுள்ளார்.