"INDIA என பெயர் சொல்ல அச்சப்படுகிறார்கள்" - பத்திரிகையாளர் ஜென்ராம்

"இந்தியா எனப் பெயர் சொல்ல அச்சப்படுகிறார்கள்" என மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்படுவதாக தகவல் பரவி வருகிறது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் பாரத் என்ற பெயர் மாற்ற தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், “ "இந்தியா என்று அழைக்காதீர்கள்; பாரத் என்றே அழையுங்கள் அப்படியென்றால், பாரத் இந்து ராஷ்டிரா" என ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர் சொல்லியிருந்தார். கிட்டத்தட்ட அதை குடியரசுத் தலைவர் மாளிகை கடைப்பிடித்திருத்திருக்கிறது என்பதைப் போலத்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. இத்தனை நாட்களாக இந்திய குடியரசுத் தலைவர் என்றிருந்த நிலை, தற்போது பாரத் ஜனாதிபதி என ஏன் மாறுகிறது என்பது கேள்வியாக இருக்கிறது. தேசிய அளவில் இந்தியா என்றே அழைக்கப்படுகிறது. தமிழகத்திலும் பாரத் என்று சொல்லப்படுவதில்லை. பல வடமாநிலங்களில் பாரத் என்று பயன்படுத்தப்படுகிறது. தற்போது அவர்கள் இந்தியா எனப் பெயர் சொல்ல கூசுகிறார்கள்; அச்சப்படுகிறார்கள். அதற்குக் காரணம் எதிர்க்கட்சிகளுடைய கூட்டணிப் பெயர் இந்தியா என இருப்பதுதான்” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com