\
மறைந்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரனின் கடைசி முகநூல் பதிவு..

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரனின் கடைசி முகநூல் பதிவு..

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரனின் கடைசி முகநூல் பதிவு..
Published on: 

மறைந்த பத்திரிகையாளர் ஞாநி சங்கரன் நேற்றிரவு எழுதிய முகநூல் பதிவில், குருமூர்த்தி சங் பரிவாரத்தின் குரலாக ஒலிக்கிறார் என்று கூறியுள்ளார். 

பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு மாலை 4 அல்லது 5 மணியளவில் நடைபெறவுள்ளது. பின்னர் அவரது உடல் ஏதேனும் ஒரு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்படவுள்ளது. 

முன்னதாக நேற்றிரவு 7 மணியளவில் ஞாநி கருத்து ஒன்றை முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், “துக்ளக் ஆண்டு விழா வீடியோ கொஞ்ச நேரம் பார்த்தேன். குருமூர்த்தி பகிரங்கமாக பி.ஜே.பி நிலை எடுக்கிறார். சோ இவ்வளவு பகிரங்கமாக செய்ய மாட்டார். பி.ஜே.பியையும் லேசாக கிண்டல் செய்வார். குருமூர்த்தி முழுக்க முழுக்க, பி.ஜே.பி சங்ப் பரிவாரத்தின் குரலாகவே ஒலிக்கிறார். இப்படி வெளிப்படையாக இருப்பது வரவேற்கத் தக்கது. முழுக்க அம்பலமானால்தான் மக்களுக்குப் புரியும்” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com