\
சமூக வலைதளங்களில் ஆபாச விமர்சனம்: விஜய் ரசிகர்கள் மீது புகார்

சமூக வலைதளங்களில் ஆபாச விமர்சனம்: விஜய் ரசிகர்கள் மீது புகார்

சமூக வலைதளங்களில் ஆபாச விமர்சனம்: விஜய் ரசிகர்கள் மீது புகார்
Published on

விஜய் படத்தைப் பற்றி கருத்துச் சொன்னதற்காக தன்னை ட்விட்டரில் ஆபாசமாக விமர்சித்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் விஸ்வநாதனை நேரில் சந்தித்து புகார் மனுவை அளித்த அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தன்யா, நடிகர் விஜயின் சுறா படம் குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டதற்காக விஜயின் ரசிகர்கள் என கூறப்படும் நபர்கள் தன்னை ஆபாசமாகத் திட்டியதாக தெரிவித்தார். சர்ச்சைக்குரிய பதிவை நீக்கிய பின்னரும் கடுமையான சொற்கள் மற்றும் ஆபாச கருத்துக்களை அந்த நபர்கள் வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com