“மாதம் 60 லட்சம் வசூல் செய்த பாஜக.. கவுன்சிலராக கூட இல்லாத ஒருவர் ஊழலில் ஈடுபடுகிறார்” - ஜோதிமணி

மணல் மாபியாக்களிடமிருந்து பாஜக அலுவலகம் மாதம் 60 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை அமலாக்கத்துறை வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டார்கள் - ஜோதிமணி
ஜோதிமணி எம்.பி
ஜோதிமணி எம்.பிpt web

பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கரூரில் நடைபயணம் மேற்கொண்டபோது , கரூர் எம்.பி ஜோதிமணி கரூருக்கு செய்த மக்கள் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பேசினார்.

இந்நிலையில் எம்.பி. ஜோதிமணி கரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலையின் யாத்திரை தோல்வியடைந்துள்ளது. அண்ணாமலையின் யாத்திரை வசூலுக்காக நடைபெறுகிறது.

ராகுல் காந்தி இந்தியா முழுவதும் 3,500 கிலோமீட்டர் யாத்திரை மேற்கொண்டார். தினசரி 23 கிலோமீட்டர் நடந்தோம். யாரையாவது மிரட்டி யாத்திரைக்காக பணம் வாங்கினோம் என குற்றம்சாட்டமுடியுமா? மணல் மாபியாக்களிடமிருந்து பாஜக அலுவலகம் மாதம் 60 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை அமலாக்கத்துறை வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். மக்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

2 ஆண்டுகள் எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 7,500 கோடியில் மத்திய அரசு செய்த ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கரூரில் உள்ள அண்ணாமலையின் உறவினர்கள் சொத்து குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அண்ணாமலையின் யாத்திரை ஷூட்டிங் மற்றும் வசூலுக்கானது. பொய்யையும் அண்ணாமலையையும், பொய்யையும் மோடியையும், பாஜகவையும் பிரிக்க முடியாது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com