\
'இணைவது நிச்சயம் அதுவே எங்களது இலட்சியம்' போடியில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்!

'இணைவது நிச்சயம் அதுவே எங்களது இலட்சியம்' போடியில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்!

'இணைவது நிச்சயம் அதுவே எங்களது இலட்சியம்' போடியில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்!
Published on: 

அதிமுக - அமமுக ஒன்றிணைய வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள வ.சிந்தலச்சேரி கிராமத்தில் பல இடங்களில் அதிமுக-அமமுக ஒன்றிணைய வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இபிஎஸ், ஓபிஎஸ், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் படங்களோடு, 'இணைவது நிச்சயம் அதுவே எங்களது இலட்சியம்' மற்றும் ஒன்றுபட்டால் வாழ்வு இல்லையேல் தாழ்வு என்ற வாசகங்களும் அச்சிடப்பட்டுள்ளன.

இந்த போஸ்டரை தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டியைச் சேர்ந்த ஒருங்கிணைந்த அதிமுகவினர் அடித்து ஒட்டியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com