
“தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாக திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாக காரணம்” என்று துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் வார இதழின் 51ஆவது ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா கலந்து கொண்டு பேசவுள்ளார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய குருமூர்த்தி, “யார் தேசியத்தை விரும்பிகிறார்களோ அவர்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க விரும்பும் சூழல் உள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுமை உள்ளது. அது வெளிப்பட தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் ஜாதி கட்சிகள் உருவாக திராவிடமே காரணம். பிராமண எதிர்ப்பு தான் ஜாதி கட்சி உருவாக காரணம். திமுகவை எதிர்க்க வேண்டுமெனில் சசிகலா போன்றவர்களையும் சேர்த்து கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக வளரும். அதிமுக இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மிகமும், தேசியமும் இருந்திருக்காது” என்றார் குருமூர்த்தி.