India post
India postpt desk

இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? கல்வித்தகுதி என்ன?

இந்திய அஞ்சல் துறையில், தமிழகத்தில் காலியாக உள்ள 3,789 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Published on

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 44,228 கிராம அஞ்சல் பணியாளர்கள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதில் தமிழகத்தில் மட்டும் 3,789 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அஞ்சல் துறை, துறைசாராத சேவை அமைப்பின் கீழ் இந்த காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

India post
India postpt desk

விண்ணப்பிக்கத் தேவையான கல்வித் தகுதி:

# குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி.

# கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தேர்ச்சி.

# விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக உள்ளூர் மொழி அறிவு கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

India post
சிவகங்கை | பலகட்ட முயற்சியால் சாத்தியமானது 11-ம் வகுப்பு நாகலாந்து மாணவியின் தமிழ்வழிக் கல்வி கனவு!

விண்ணப்பிக்கத் தேவையான வயது வரம்பு:

விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிக பட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

India post
India postpt desk

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

indiapostgdsonline.cept.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் 15.07.2024 முதல் 05.08.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com