வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு: சிலம்பம் சுற்றி அரசுக்கு நன்றி தெரிவித்த 7ஆம் வகுப்பு மாணவி

வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு: சிலம்பம் சுற்றி அரசுக்கு நன்றி தெரிவித்த 7ஆம் வகுப்பு மாணவி
வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு: சிலம்பம் சுற்றி அரசுக்கு நன்றி தெரிவித்த 7ஆம் வகுப்பு மாணவி

19 மணிநேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வேலை வாய்ப்பில் சிலம்பம் விளையாட்டிற்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் பணியில் சேர்ப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக அரசுத் துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியிடங்களில், விளையாட்டு வீரர்களுக்காக 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை வரவேற்கும் விதமாக மதுரையில் ஆத்திக்குளம் பகுதியில் தனியார் பள்ளியில் பயிலும் 7வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி திவ்ய ஸ்ரீ, தொடர்ச்சியாக 19 மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை தமிழக அரசு 3 சதவிகித இட ஒதுக்கீட்டில் சிலம்பம் போட்டியை சேர்த்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தொடர்ந்து 19 மணி நேரம் இருபுறமும் கத்தியால் செய்த சிலம்பத்தை சுற்றி மாணவி திவ்ய ஸ்ரீ சாதனை முயற்சியை மேற்கொண்டார்.

மாணவியின் இந்த சாதனை முயற்சியை தனியார் அமைப்பு சார்பில் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com