கொரோனா பரவல்: கோவையில் குணமாகி வீட்டிற்கு சென்றவருக்கு உறுதியானது ஜேஎன்.1 வைரஸ் பாதிப்பு

கோவையில் ஒருவருக்கு ஜேஎன்.1 தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
கொரோனாpt web

உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பல்வேறு அலைகளாக வந்து மக்களை வாட்டிவதைத்தது. இதனால லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகின. எனினும், கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவர நீண்ட நாட்கள் எடுத்தது. பின்னர் தடுப்பூசி கண்டுபிடிப்புக்குப் பிறகு, அதன் இயல்பு நிலை தற்போது திரும்பிவரும் நிலையில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு பரவ தொடங்கியுள்ளது.

இந்த தொற்றும், இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது. எனினும், இதனால் பயப்படத் தேவையில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கேரளாவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றின்மூலம் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர பகுதியான புலியகுளம் பகுதியில் ஒருவருக்கு ஒமைக்ரான் ஜேஎன்.1 தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவிட் 19
கோவிட் 19ட்விட்டர்

முதல்முறையாக கோவை மாநகராட்சியில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவிற்கான அறிகுறி இருந்த நபரை, மரபணு பகுப்பாய்வு பரிசோதனை எடுக்கப்பட்டு சென்னையில் உள்ள ஆய்வகத்தில் அனுப்பிவைக்கப்பட்டதில், தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குணமடைந்த அடுத்து, வீடு திரும்பியுள்ளார். அவருக்கு எந்தவித வெளிநாட்டு பயணமும் இல்லை எனவும், விதிகள் இல்லாததால் தொடர்புடைய நபர்கள் தொடர்பாக சோதனை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com