ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் PT Desk

ஜனநாயகம் தழைத்தோங்க ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் - ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி.ராதாகிருஷ்ணன்

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தழைத்தோங்க ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும் என ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Published on

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே நடுப்பாளையத்தில் வேத பாடசாலை மற்றும் திருமண மஹால் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மக்களையும் சந்தித்து பேசினேன். அவர்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். அங்கு விரைவில் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். ஜனநாயகம் தழைத்தோங்க ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேண்டும். வைகோ குற்றச்சாட்டு வைக்காத நல்ல திட்டம் எதுவுமில்லை. தமிழகத்தில் எதை செய்தாலும் குற்றம்சாட்டுபவர்களில் முதன்மையானவர் வைகோ.

தமிழக ஆளுநர் என்ன தவறு செய்தார் எனக் கூறமுடியுமா? தமிழகத்திற்கு இந்த ஆளுநர் போல இதுவரை கிடைக்கவில்லை. தூய ஒழுக்கம், அடக்கம், தமிழின் மீதும், தமிழகத்தின் மீதும் அதிக அக்கறை கொண்டவர். இப்படிப்பட்டவரை ஏன் திமுக எதிர்க்கிறது என யாருக்கும் தெரியாது. தவறையும், பொய் வாக்குறுதியையும் மறைக்க தான் திமுக இதனை செய்கிறது. இதுபோன்ற ஆளுநர் கிடைப்பது அரிதிலும் அரிது.

தமிழக முன்னேற்றத்திற்கு ஆளுநரை தமிழக அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்திற்கு உட்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. அரசியல் பற்றிய கேள்விக்கு அண்ணாமலை பதில் சொல்வார். அண்ணாமலை தன்னை வருத்தி நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த பாத யாத்திரைக்கு வாழ்த்துகள்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பெயரை மாற்றியதற்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுபோல், அதனை வரவேற்கவும் செய்கின்றனர். விவாதித்து நல்லவை நிறைவேற்றப்பட வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com