அப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்

அப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்

அப்பல்லோவில் ஜெ. சசி பேசிய வீடியோ: திவாகரன் மகன் தகவல்
Published on

அப்போலோ ‌மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவருடன் சசிகலா பேசிய வீடியோ உரையாடலை வெளியிடப் போவதாக சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கூறிவரும் நிலையில், அதுகுறித்து முகநூல் பக்கத்தில் ஜெயானந்த் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார். நோயாளிக்கான உடையில் ஜெயலலிதாவை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதாலேயே, அவரது சிகிச்சைப் படம் வெளியிடப்படவில்லை என்று கூ‌றியுள்ளார். இது சசிகலாவின் தியாகச் செயல் என்று ஜெயானந்த் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மாதிரி சவப்பட்டியை வைத்து பன்னீர்செல்வம் அணியினர் வாக்கு சேகரித்ததை அவர் விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவும், சசிகலாவும் மருத்துவமனையில் நடத்திய உரையாடல் வீடியோ வெளிவந்தால் பன்னீர்செல்வத்தையும் அவர்களது அணியினரையும் என்ன செய்யலாம் என்று கேள்வி எழுப்பியுள்ள ஜெயானந்த், அந்த நாள் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com