செம்மலை கருத்து யாருடையது? அமைச்சர் கேள்வி

செம்மலை கருத்து யாருடையது? அமைச்சர் கேள்வி
செம்மலை கருத்து யாருடையது? அமைச்சர் கேள்வி

அதிமுக ஒன்றாக இணைய வேண்டாம் என்று செம்மலை தெரிவித்த கருத்து, யாருடையது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க. (புரட்சி தலைவி அம்மா) அணியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைப்பு செயலாளர் செம்மலை எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ‘ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு பொதுமக்களிடையே ஆதரவு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கு எதிர்ப்புதான் இருக்கிறது. எனவே நாம் அந்த அணியுடன் இணையக்கூடாது, தனித்தே செயல்பட வேண்டும்’ என கூறினர். பின்னர் பேசிய செம்மலை, அ.தி.மு.க. அம்மா அணியுடன் இணையக்கூடாது என்று நிர்வாகிகள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதை தலைமையிடத்தில் சொல்வேன்’ என கூறினார்.

இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் இன்று கூறும்போது, ‘செம்மலை கருத்து தனிப்பட்டதா, அல்லது ஓபிஎஸ் அணியுடையதா? என்பதை தெரிவிக்க வேண்டும். காலம் கனிந்துவிட்ட பின்னும் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார்கள். ஜெயலலிதாவின் ஆட்சி 4 ஆண்டுகள் மட்டும் அல்ல, அதற்கு பின்னும் தொடரும்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com