குரோம்பேட்டையில் திருமண மண்டபத்தில் மணமகளின் 35 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த சேலையூரைச் சேர்ந்த அனிதா என்பவர் தனது திருமண வரவேற்புக்கான நகைகளை பெட்டியில் வைத்திருந்தார். இரவு பெட்டி உடைக்கப்பட்டு, நகைதிருடப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக குரோம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மண்டபத்தில் இருந்த கண்காணிப்புக் காமிராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.