சென்னை சவுகார்பேட்டை நகை வியாபாரியிடம் நூதன முறையில் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை சவுகார்பேட்டை வாட்டர்பேசின் தெருவில் சந்தோஷ் மாஜி நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த வடமாநில நபர் ஒருவர், 681 கிராம் தங்கக் கம்பிகளைக் கொடுத்து, அதனை செயினாக செய்து தரவேண்டும் எனக் கூறியுள்ளார். மொத்த தங்கக் கம்பிகளையும் அடமானமாக கொடுத்த அந்த நபர், அதற்கு பதிலாக 42 சவரன் தங்கச் சங்கிலிகளை வாங்கிச் சென்றுள்ளார். தங்கக் கம்பிகளை சோதனை செய்தபோது, அவற்றில் தங்க முலாம் பூசப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்துள்ள யானைகவுனி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.