
மத்திய அரசின் புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் நகைக்கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹால்மார்க் தர முத்திரை கொண்ட தங்க ஆபரணங்களில், HUID எனப்படும் எண் குறியீடு பதிவிடும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த முறையை திரும்பப் பெற வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் காலை முதல் மதியம் வரை நகைக்கடைகளை அடைத்து கடைகளின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சுமார் ஆயிரத்து 500 நகைக்கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளன. அனைத்து நகைகளுக்கும் குறியீடு அமைக்க வேண்டும் என்கிற நடைமுறை சாத்தியமற்றவை என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.