\
ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடைகளில் வருமானவரி சோதனை

ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடைகளில் வருமானவரி சோதனை

ஜாய் ஆலுக்காஸ் நகைக் கடைகளில் வருமானவரி சோதனை
Published on: 

தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் பல கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகளில் வருமானவரித்துறையினர் சோத‌னையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கடைகளிலும் சுமார் 8 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தியாகராய நகர், குரோம்பேட்டை, திருச்சி, கோவை, கும்பகோணம், நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் உள்ள‌ ஜாய் ஆலுக்காஸ் நடைக் கடைகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதனால் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ‌உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com